முகப்பு திருமண பொருத்தம் ராசி அதிபதி பொருத்தம் - இராசி உரிமையாளர் பொருத்தம்

ராசி அதிபதி பொருத்தம் – இராசி உரிமையாளர் பொருத்தம்

ஆசிரியர்

நாள்

பிரிவு

ராசி அதிபதி பொருத்தம் – இராசி உரிமையாளர் பொருத்தம்

27 விண்மீன்களும் 12 ராசிக்களில் அடங்குகின்றன.

இந்த 12 ராசிக்களுக்கும் தனி தனியாக உரிமையாளர் இருக்கிறார். உரிமையாளர் என்ற தமிழ் சொல் வட மொழியில் அதிபதி என்கிறார்கள்.

ராசிக்கான உரிமையாளர் என கோள்களை வைத்துள்ளனர்.

இந்த ராசி உரிமையாளர்களுள் சிலர் நட்பாகவும், சிலர் ஒருவருக்கு ஒருவர் அமைதி நிலையிலும், சிலர் பகையாகவும் இருக்கிறார்கள் என சோதிடம் கணிக்கிறது.

எடுத்துக்காட்டாக ஞாயிறுக்கு நிலவு நட்பு. அறிவன் (புதன்) சமம் என்று சொல்கிறார்கள். காரி (சனி) பகை கோளாக அமைந்துள்ளது.

எதற்காக இந்த ராசி அதிபதி பொருத்தம் பார்க்கிறோம்?

ராசி அதிபதி பொருத்தம் இருந்தால் பெண்ணும் ஆணும் கூடி வாழும் பொழுது அவர்கள் நெருங்கிய அன்புடன் வாழ்வார்கள்.

மேலும், ராசி பொருத்தம் இருந்தால், பெண்ணை பெற்றவர்களும், அவளின் குடும்பத்தாரும், ஆணை பெற்றவர்களும், அவனின் குடும்பத்தாரும் ஒற்றுமையுடன் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து அன்பு பாராட்டி வாழ்வார்கள்.

மேலும் எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருப்பினும் ஆணும் பெண்ணும் பொருத்தம் இருந்தால் ஒத்து இருப்பர், இல்லையேல் மாற்று கருத்துக்களால் பகை கொண்டு மன அமைதி இன்றி இருப்பர்.

கோள்களும் அவற்றின் ஒற்றுமை நிலையும்
கோள்கள் கோள்களின் நட்பு நிலை
நட்பு சமம் பகை
ஞாயிறு செவ்வாய், நிலவு, வியாழன் அறிவன் (புதன்) வெள்ளி (சுக்), காரி (சனி)
நிலவு ஞாயிறு, அறிவன் (புதன்) செவ்வாய், வியாழன், வெள்ளி (சுக்), காரி (சனி)
செவ்வாய் நிலவு, ஞாயிறு, வியாழன் வெள்ளி (சுக்), காரி (சனி) அறிவன் (புதன்)
வியாழன் செவ்வாய், ஞாயிறு, நிலவு காரி (சனி) வெள்ளி (சுக்), அறிவன் (புதன்)
வெள்ளி (சுக்) அறிவன் (புதன்), காரி (சனி) செவ்வாய், வியாழன் ஞாயிறு, நிலவு
அறிவன் (புதன்) ஞாயிறு, வெள்ளி (சுக்) செவ்வாய், வியாழன், காரி (சனி) நிலவு
காரி (சனி) வெள்ளி (சுக்), அறிவன் (புதன்) வியாழன் செவ்வாய், ஞாயிறு, நிலவு

 

யார் எந்த ராசிக்கு அதிபதி?
இராசி உரிமையாளர் – அதிபதி தன்மை
மேஷம், விருச்சிகம் செவ்வாய் நிலம், ஆற்றல், திறமை
ரிஷபம் , துலாம் வெள்ளி (சுக்) வாழ்வு மகிழ்சி
மிதுனம், கன்னி அறிவன் (புதன்) கல்வி, அறிவாற்றல்
கடகம் நிலவு மனம், அன்பு, அம்மா
சிம்மம் ஞாயிறு உடல், வழி நடத்துதல், தந்தை
தனுசு , மீனம் வியாழன் (குரு) செல்வம், குழந்தை
மகரம் , கும்பம் காரி (சனி) ஆயுள், தொழில்
ராகு, கேது இவற்றிற்கு என்று உரிமையாக எந்த ராசியும் இல்லை. தனி தன்மை இல்லை

 

பொருந்தாத இராசிகள்

மேலே சொன்ன கணக்கின் படி பார்த்தால்

மேஷம் ராசி ரிசபம், மிதுனம், மகரம், மீனம் இவற்றிற்கு பகை

ரிசபம் ராசி கடகம், சிம்மம், விருட்சிகம், தனுசு, மீனம் இவற்றிற்கு பகை

மிதுனம் ராசி கடகம், சிம்மம், தனுசு இவற்றிற்கு பகை

கடகம் ராசி மேசம், விருட்சிகம், மகரம், கும்பம் இவற்றிற்கு பகை

சிம்மம் ராசி ரிசபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் இவற்றிற்கு பகை

கன்னி ராசி மிதுனம், கடகம், சிம்மம், விருட்சிகம், தனுசு, மீனம் இவற்றிற்கு பகை

துலாம் ராசி ரிசபம், கடகம், சிம்மம், கன்னி, விருட்சிகம், தனுசு, மீனம் இவற்றிற்கு பகை

விருட்சிகம் ராசி மேசம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், கும்பம் இவற்றிற்கு பகை

தனுசு ராசி, ரிசபம், மிதுனம், துலாம், மகரம், கும்பம் இவற்றிற்கு பகை

மகரம் ராசி, மிதுனம், கடகம், சிம்மம், கும்பம் இவற்றிற்கு பகை

கும்பம் ராசி கடகம், சிம்மம், கன்னி, மகரம் இவற்றிற்கு பகை

மீனம் ராசி ரிசபம், கன்னி, துலாம், விருட்சிகம், கமரம், கும்பம் இவற்றிற்கு பகை

இந்த பொருத்தம் பார்க்கும் பொழுது, கடகம், கன்னி ஆகிய இரண்டிற்கு மட்டும் ஒரே இராசியாக ஆணும் பெண்ணும் இருப்பது நல்லதல்ல.

அப்படி ஒன்றாக இருப்பின், குறைந்தது 9 பொருத்தங்கள் வந்தால் மனம் முடிக்கலாம்.

அண்மைய இடுகைகள்

மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்

பங்சாங்கத்தில் உள்ள ஐந்து திறன்களில் யோகமும் ஒன்று. மரண யோகம் - சில கிழமைகளுடன் சில விண்மீன்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகி விடும். எந்தக் கிழமைகளும் எந்த விண்மீன் அப்படிச் சேரும்போது, அந்த ஆகாத...

குருமங்கல யோகம் என்றால் என்ன?

குருமங்கல யோகம் என்றால் என்ன? தமிழகத்தில் செவ்வாய் கோளிற்கு ஜாதகம் மற்றும் ஜோதிடத்தில் பெருமளவில் கவணம் கொடுப்பர். கவணம் பெற்ற செவ்வாயை கண்டால் தமிழக ஜோதிடர்கள் சற்று அய்யத்துடனேயே அதை கையாள்வர். சொல்லப்போனால், செவ்வாய் கிழமையை வெருவாய்...

சுனபா யோகம், அனபா யோகம்

சுனபா யோகம், அனபா யோகம் வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால், வியாழன் 2 ஆம் இடத்தில் இருந்தால் இது சுனபா யோகம். வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால்,...

குரு சந்திர யோகம்

குரு சந்திர யோகம் வியாழனும் நிலவும் சிறப்பான அமைப்பில் இருந்தால் அது தான் இந்த குரு சந்திர யோகம். இத்தகைய யோகம் நம் சாதகத்தில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது மிக எளிது. உங்கள் ஜாதகத்தில் நிலவு...

கஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது?

கஜகேசரி யோகம் கஜம் என்றால் யானை. கேசரி என்றால் அரிமா (சிங்கம்). கஜகேசரி யோகம் என்றால், யானை மற்றும் அரிமாவின் வலிமை பெற்ற ஒரு நிலை என பொருள். கஜகேசரி யோகம் கிடைத்தால் என்ன பயன்? ஒருவருக்கு குறிப்பிட்ட...