முகப்பு திருமண பொருத்தம் ரச்சுப் பொருத்தம் - ரஜ்ஜு பொருத்தம்

ரச்சுப் பொருத்தம் – ரஜ்ஜு பொருத்தம்

ஆசிரியர்

நாள்

பிரிவு

ரச்சுப் பொருத்தம் – ரஜ்ஜு பொருத்தம் – தாலி சரடு பொருத்தம்

தினப் பொருத்தம் போல இதுவும் ஒரு அடிப்படை தேவையான பொருத்தம்.

தினப் பொருத்தமானது நாளது வாழ்வில் ஆணும் பெண்ணும் எப்படி ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பதை கணிப்பதாக இடுக்கிறது என்றால், இந்த ரச்சுப் பொருத்தம் – ரஜ்ஜு பொருத்தம் அவர்கள் உயிருடன் வாழ்வார்களா என்பதை கணிப்பதாகும்.

ரஜ்ஜு பொருத்தத்தை தாலி சரடு பொருத்தம் என்றும் கூறுவார்கள். அதாவது பெண் கழுத்தில் எவ்வளவு நாட்களுக்கு தாலி சரடு இருக்கும் என்பது இந்த பொருத்தத்தின் அடிப்படை.

இந்த ரச்சு பொருத்தமானது ஐந்து வகைகளாக பிரிக்கப்படுகிறது.

தலை ரஜ்ஜூ

ஆண் குருதியும் பெண் குருதியும் ஒரே தன்மையில் இருக்கிறதா என்பதை சோதிட அடிப்படையில் பார்ப்பது இந்த பொருத்தம்.

இந்த பொருத்தம் இல்லை என்றால் குருதியின் தன்மை வேறுபட்டு ஆண் அல்லது பெண்ணிற்கு மூளை தடுமாற்றம் ஏற்படும்.

விண்மீன்கள்: மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்.ஆகியவை. இவற்றில் ஏற்றம் இறக்கம் என்றில்லை.

வயிறு ரஜ்ஜூ

பொருத்தம் இல்லை என்றால் வயிற்றில் காற்று அடைப்பு, காற்று வெளியேராமல் தினரல், உடல் இளைத்து போகுதல், செரிமான கோளாரால் அவதி, வயிற்றில் நோய் தொற்று.

கார்த்திகை, உத்தரம், உத்ராடம் ஆகியவை – ஏற்றம் கொண்டவை
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை – இறக்கம் கொண்டவை

கழுத்து ரஜ்ஜூ

பொருத்தம் இல்லை எனில் கௌத்து பகுதியில் பாதிப்பு, உணவு குழாயில் பாதிப்பு, மூச்சு விடுவதில் பாதிப்பு, காது கேளாமை, வலி, கண் பார்வை இளம் வயதிலேயே மங்கிப் போகுதல்

ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகியவை – ஏற்றம் கொண்டவை
திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகியவை – இறக்கம் கொண்டவை

தொடை ரஜ்ஜூ

பொருந்தவில்லை எனில் தொடை பகுதியில் நோய் தொற்று. இதனால் மூலம், பிறப்புறுப்பு பாதிப்பு என பல தொல்லைகள் ஏற்படும்.

பரணி, பூரம், பூராடம் ஆகியவை – ஏற்றம் கொண்டவை
பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை – இறக்கம் கொண்டவை

பாதம் ரஜ்ஜூ

பொருந்த வில்லை எனில் யானைக்கால் நோய், பாதம் முழுவதும் வெடிப்பு, குருதி கசிவு, நகங்களில் பாதிப்பு, குதிங்கால் வலி, கால் விரல்கள் மரத்துப்போதல்.

அசுவினி, மகம், மூலம் ஆகியவை – ஏற்றம் கொண்டவை
ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை – இறக்கம் கொண்டவை.

ரஜ்ஜூ பொருந்தவில்லை என்றால்?

இந்த பொருத்தம் பார்ப்பதற்கு எளிய வழி என்னவென்றால், ஆணும் பெண்ணும் ஒரே ரச்சு விண்மீன் குழுவில் இருக்கக் கூடாது.

அப்படி இருந்தாலும் ஒரே தன்மை கொண்டவையாக இருக்கக் கூடவே கூடாது.

இதில், தலை ரஜ்ஜூ மற்றும் கழுத்து ரஜ்ஜூ ஆகியவற்றில் உள்ள விண்மீன்களை கொண்ட ஆண் பெண் இருவரும் ஒரே விண்மீனாக இருந்தால் சேர்வது நல்லதல்ல. தாலி கயிறு நிலைக்காது என கொள்ளலாம்.

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஒருவருக்கொருவர் திருமணம் செய்ய கூடாது.

தலை ரஜ்ஜூ பொருந்தவில்லை என்றால் தாலி இறங்கும். ஆண் அல்லது பெண் உயிர் பலியாகும்.

கழுத்து ரஜ்ஜூ பொருந்தவில்லை என்றால் பெண் உடல் நிலை கடுமையாக பாதிப்படையும்.

வயிறு ரஜ்ஜூ பொருந்தவில்லை என்றால் குழந்தை வரம் இருக்காது

தொடை ரஜ்ஜூ பொருந்தவில்லை என்றால் ஏழ்மை நிலை வாழ்க்கை அமையும். பதிவி செல்வம் இழப்பார்கள்.

பாத ரஜ்ஜூ பொருந்தவில்லை என்றால் ஒன்றாக கூடி வாழ மாட்டார்கள்.

அண்மைய இடுகைகள்

மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்

பங்சாங்கத்தில் உள்ள ஐந்து திறன்களில் யோகமும் ஒன்று. மரண யோகம் - சில கிழமைகளுடன் சில விண்மீன்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகி விடும். எந்தக் கிழமைகளும் எந்த விண்மீன் அப்படிச் சேரும்போது, அந்த ஆகாத...

குருமங்கல யோகம் என்றால் என்ன?

குருமங்கல யோகம் என்றால் என்ன? தமிழகத்தில் செவ்வாய் கோளிற்கு ஜாதகம் மற்றும் ஜோதிடத்தில் பெருமளவில் கவணம் கொடுப்பர். கவணம் பெற்ற செவ்வாயை கண்டால் தமிழக ஜோதிடர்கள் சற்று அய்யத்துடனேயே அதை கையாள்வர். சொல்லப்போனால், செவ்வாய் கிழமையை வெருவாய்...

சுனபா யோகம், அனபா யோகம்

சுனபா யோகம், அனபா யோகம் வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால், வியாழன் 2 ஆம் இடத்தில் இருந்தால் இது சுனபா யோகம். வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால்,...

குரு சந்திர யோகம்

குரு சந்திர யோகம் வியாழனும் நிலவும் சிறப்பான அமைப்பில் இருந்தால் அது தான் இந்த குரு சந்திர யோகம். இத்தகைய யோகம் நம் சாதகத்தில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது மிக எளிது. உங்கள் ஜாதகத்தில் நிலவு...

கஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது?

கஜகேசரி யோகம் கஜம் என்றால் யானை. கேசரி என்றால் அரிமா (சிங்கம்). கஜகேசரி யோகம் என்றால், யானை மற்றும் அரிமாவின் வலிமை பெற்ற ஒரு நிலை என பொருள். கஜகேசரி யோகம் கிடைத்தால் என்ன பயன்? ஒருவருக்கு குறிப்பிட்ட...