முகப்பு திருமண பொருத்தம் மரப் பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது?

மரப் பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது?

ஆசிரியர்

நாள்

பிரிவு

மரப் பொருத்தம் என்றால் என்ன? மரப் பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது? திருமண பொருத்தம் பார்க்கும் போது மரப் பொருத்தம் கட்டாயம் பார்க்க வேண்டுமா?

மரப் பொருத்தம் என்றால் என்ன?

மரப் பொருத்தம் என்பது, ஒவ்வொரு சோதிட விண்மீனிற்கும் ஒரு மரம் என கணித்து அதன் படி பொருத்தம் பார்ப்பது.

அந்த மரங்களிலும், பால் உள்ள மரம், பால் இல்லா மரம் என வரையரை படுத்தப்பட்டுள்ளது.

பால் இல்லா மரம் என்றால் ஆண் என்றோ பெண் என்றோ அவற்றை பிரிப்பதில்லை. மலடு என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.

பால் உள்ள மரங்களை கொண்ட விண்மீன்கள்.

அசுவினி – எட்டி
பரணி – நெல்லி
மிருகசீரிஷம் – கருங்காலி
திருவாதிரை – செங்கருங்காலி
புனர்வசு – மூங்கில்
சித்திரை – வில்வம்
சுவாதி – மருதம்
விசாகம் – விளா
அனுஷம் – மகிழ்
அவிட்டம் – வன்னி
சதயம் – கடம்பு
உத்ரட்டாதி – வேம்பு

பால் இல்லா மரங்களை கொண்ட விண்மீன்கள்.

கார்த்திகை – அத்தி
ரோகிணி – நாவல்
பூசம் – அரசு
ஆயில்யம் – புன்னை
மகம் – ஆல்
பூரம் – பலா
உத்தரம் – அலரி
அஸ்தம் – வேலம்
கேட்டை – பிராய்
மூலம் – மா
பூராடம் – வஞ்சி
உத்ராடம் – பலா
திருவோணம் – எருக்கு
பூரட்டாதி – தேமா
ரேவதி -இலுப்பை

மரப் பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது?

இந்த மரப் பொருத்தம் பார்ப்பதன் மூலம் குழந்தை செல்வம் எப்படி இருக்கும் என்பதை கணிப்பதாகும்.

மேலும், பெண் குழந்தை பிறக்குமா என்பதையும் இதை வைத்து கணிக்கலாம்.

இந்த பொருத்தம் பார்க்க, பெண் விண்மீன் பால் உள்ளதாக அமைந்து, ஆண் விண்மீன் பாலற்றதாக அமைந்தால் குழந்தை உண்டு.

ஆண் விண்மீன் பால் உள்ளதாகவும், பெண் விண்மீன் பால் இல்லாத்தாகவும் அமைந்தால் பெண் குழந்தை இருக்காது.

ஆண் – பெண் இரண்டு விண்மீனும் பாலற்றதாக அமைந்தால் குழந்தை செல்வம் இருக்காது.

ஆண் – பெண் இரண்டு விண்மீனும் பால் உள்ளதாக இருந்தால் குழந்தை செல்வம் உண்டு.

திருமண பொருத்தம் பார்க்கும் போது மரப் பொருத்தம் கட்டாயம் பார்க்க வேண்டுமா?

பால் மரம் இருவருக்கும் இல்லாவிட்டால், மகேந்திரம் பொருத்தம் பார்க்கப்படும்.

மகேந்திரம் பொருத்தமும் இல்லாவிட்டால் ஆண், பெண் ஜாதகத்தில் ஐந்தாமிடம், ஐந்திற்கு உரியவர் மற்றும் வியாழன் இவர்களை ஆராயப்படும்.

அண்மைய இடுகைகள்

மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்

பங்சாங்கத்தில் உள்ள ஐந்து திறன்களில் யோகமும் ஒன்று. மரண யோகம் - சில கிழமைகளுடன் சில விண்மீன்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகி விடும். எந்தக் கிழமைகளும் எந்த விண்மீன் அப்படிச் சேரும்போது, அந்த ஆகாத...

குருமங்கல யோகம் என்றால் என்ன?

குருமங்கல யோகம் என்றால் என்ன? தமிழகத்தில் செவ்வாய் கோளிற்கு ஜாதகம் மற்றும் ஜோதிடத்தில் பெருமளவில் கவணம் கொடுப்பர். கவணம் பெற்ற செவ்வாயை கண்டால் தமிழக ஜோதிடர்கள் சற்று அய்யத்துடனேயே அதை கையாள்வர். சொல்லப்போனால், செவ்வாய் கிழமையை வெருவாய்...

சுனபா யோகம், அனபா யோகம்

சுனபா யோகம், அனபா யோகம் வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால், வியாழன் 2 ஆம் இடத்தில் இருந்தால் இது சுனபா யோகம். வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால்,...

குரு சந்திர யோகம்

குரு சந்திர யோகம் வியாழனும் நிலவும் சிறப்பான அமைப்பில் இருந்தால் அது தான் இந்த குரு சந்திர யோகம். இத்தகைய யோகம் நம் சாதகத்தில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது மிக எளிது. உங்கள் ஜாதகத்தில் நிலவு...

கஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது?

கஜகேசரி யோகம் கஜம் என்றால் யானை. கேசரி என்றால் அரிமா (சிங்கம்). கஜகேசரி யோகம் என்றால், யானை மற்றும் அரிமாவின் வலிமை பெற்ற ஒரு நிலை என பொருள். கஜகேசரி யோகம் கிடைத்தால் என்ன பயன்? ஒருவருக்கு குறிப்பிட்ட...