முகப்பு திருமண பொருத்தம் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா?

பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா?

ஆசிரியர்

நாள்

பிரிவு

பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா

பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா என்று கேட்டால், மனப் பொருத்தம் முழுமையாக இருந்தால் செய்யலாம்!!!

திருமண பொருத்தம் பார்ப்பது, தவறுகளை முடிந்தவரை தவிர்பதற்காக.

10 பொருத்தமும் முறையாக பொருந்தி அப்பொழுத்தும் தம்பதியர் மனம் பகையாகி பிரிவது நடந்தேறிக்கொண்டு தான் உள்ளது.

இந்த பத்து பொருத்தம் என்பது, பெண்ணின் திருமண வாழ்வு தன்மை குறித்த ஒரு கணிப்பை சொல்வது.

பத்து பொருத்தத்தை தாண்டி சாதக பொருத்தம் என்று உள்ளது.

இந்த ஜாதக பொருத்தம் தான் ஆண் பெண் மன நிலை குறித்த ஒரு ஆய்வை மேற்கொண்டு அதன் மூலம் பொருத்தம் கணிக்கப்படுகிறது.

அதாவது, ஆண் பெண் இருவரின் தோசங்கள், கோள்களின் பாதிப்புகள் என பல தகவல்கள் ஆராயப்படுகின்றன.

பொதுவாக சிலருக்குத்தான் இவ்வாரான தோசங்கள் இருக்கும். அதே போல சில சாதகங்கள் தான் இந்த 10 பொருத்தத்தில் 5 பொருத்தம் கூட இல்லாத நிலை இருக்கும்.

ஆக, நாம் சாதக பொருத்தம் மற்றும் இந்த 10 பொருத்தம் பார்ப்பதை வைத்து பொருந்தாத மன நிலை உடையவர்கள் திருமண வாழ்வில் சிறப்பாக ஒன்றாக வாழ முடியாது என்று கணிக்கிறோம்.

இத்தனை பொருத்தங்களும் இருந்து மன பொருத்தம் அடிப்படையில் அமையவில்லை என்றால், அத்தகைய திருமணங்கள் நிலைக்காமல் தான் போகும்.

சோதிடத்தின் அடிப்படையில், இந்த மன பொருத்தம் ஏற்படுவதே ஜாதக பொருத்தம் முறையாக இருப்பவர்களுக்குத் தான் என்று கணிக்கப்படுகிறது.

காதலானது 5 அல்லது 6 ஆண்டுகள் நீடித்து அதன் பின் திருமணம் நடைபெறுகிறது என்றால், கண்டிப்பாக அங்கே சாதக பொருத்தம் இருக்கும். பகை கோள்கள் இருந்திருந்தால் அந்த காதல் இத்தனை ஆண்டுகள் நீடித்திருக்க வாய்ப்பே இல்லை.

மேலும் நம் தாத்தா பாட்டி திருமணங்கள் இப்படி பொருத்தம் பார்த்து நடக்கவில்லை.

அங்கே ஆண் பெண் மன பொருத்தம் மட்டும் அல்லாது பெற்றவர்களின் மன பொருத்தமும், உறவுகளின் மன பொருத்தமும் பார்க்கப்பட்டது.

திருமணங்கள் கடவுளின் அருள் பெற்று நடப்பவை. ஆக கடவுள் என்ன முடிவு செய்கிறானோ அப்படித்தான் வாழ்வு அமையும்!

அண்மைய இடுகைகள்

மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்

பங்சாங்கத்தில் உள்ள ஐந்து திறன்களில் யோகமும் ஒன்று. மரண யோகம் - சில கிழமைகளுடன் சில விண்மீன்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகி விடும். எந்தக் கிழமைகளும் எந்த விண்மீன் அப்படிச் சேரும்போது, அந்த ஆகாத...

குருமங்கல யோகம் என்றால் என்ன?

குருமங்கல யோகம் என்றால் என்ன? தமிழகத்தில் செவ்வாய் கோளிற்கு ஜாதகம் மற்றும் ஜோதிடத்தில் பெருமளவில் கவணம் கொடுப்பர். கவணம் பெற்ற செவ்வாயை கண்டால் தமிழக ஜோதிடர்கள் சற்று அய்யத்துடனேயே அதை கையாள்வர். சொல்லப்போனால், செவ்வாய் கிழமையை வெருவாய்...

சுனபா யோகம், அனபா யோகம்

சுனபா யோகம், அனபா யோகம் வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால், வியாழன் 2 ஆம் இடத்தில் இருந்தால் இது சுனபா யோகம். வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால்,...

குரு சந்திர யோகம்

குரு சந்திர யோகம் வியாழனும் நிலவும் சிறப்பான அமைப்பில் இருந்தால் அது தான் இந்த குரு சந்திர யோகம். இத்தகைய யோகம் நம் சாதகத்தில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது மிக எளிது. உங்கள் ஜாதகத்தில் நிலவு...

கஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது?

கஜகேசரி யோகம் கஜம் என்றால் யானை. கேசரி என்றால் அரிமா (சிங்கம்). கஜகேசரி யோகம் என்றால், யானை மற்றும் அரிமாவின் வலிமை பெற்ற ஒரு நிலை என பொருள். கஜகேசரி யோகம் கிடைத்தால் என்ன பயன்? ஒருவருக்கு குறிப்பிட்ட...