முகப்பு திருமண பொருத்தம் நாடி பொருத்தம் பார்ப்பதால் என்ன பயன்?

நாடி பொருத்தம் பார்ப்பதால் என்ன பயன்?

ஆசிரியர்

நாள்

பிரிவு

நாடி பொருத்தம் பார்ப்பதால் என்ன பயன்?

நாடி பொருத்தம் பார்த்து மனம் முடித்தால் நோய் நொடி இல்லாமல் வாழலாம் என்கிறது சோதிடம்.

இந்த நாடி பொருத்தம் ஆண் பெண் இருவரின் குருதிகள் ஒற்றுமையுடம் உள்ளதா என பிறந்த விண்மீன்களை வைத்து கணக்கிடப்படுகிறது.

நாடி பார்ப்பது என்பது என்பது மருத்துவ முறைகளில் ஒன்று.

அதே போல விண்மீன்களின் நாடிகளும் ஒன்றுக்கொன்று ஒவ்வாத நிலை கொண்டிருக்கும்.

அதனால் ஆண் பெண் விண்மீன்களை பொருத்தம் பார்த்து திருமணம் முடிப்பதால் நாடி பொருத்தம் இருக்கும்.

ஆண் மற்றும் பெண் இருவருக்கும் ஒரே நாடியாக இருந்தால் பொருத்தம் கிடையாது,

வெவ்வேறு நாடியாக இருப்பின் பொருத்தம் உண்டு.

விண்மீன்கள் நாடி அடிப்படையில் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

வாத நாடி:

அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி

பித்த நாடி:

பரணி, மிருகசீரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுசம், பூராடம், அவிட்டம், உத்ரட்டாதி

நீர்ம நாடி:

கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி

ஒரே நாடியில் உள்ளவர்கள் மனம் முடித்தால் அதன் விளைவுகள் என்ன என்று பார்க்கலாம்.

வாதம்: காற்று மற்றும் நிலம் தொடர்பானது.

செயலற்ற அல்லது குறைவான இயக்கம், பக்கவாதம், வயிற்றுக் கோளாறு, காற்றுப் பிடிப்பு, மூச்சுப் பிடிப்பு, ஒரு சிலருக்கு குளிர் நேரங்களில் கால் பாதத்தில் இறுக்கப் பிடித்து கொள்ளும். இது ஒரு சில நிமிடங்கள் வரை நீடிக்கும் இதுவும் வாதம் தான்.

இத்தகைய பாதிப்புகள் ஏற்படும்.

பித்தம்: நெருப்புத் தன்மை அதாவது உடல் சூடு.

நம் உடலின் சூடு ஒவ்வொருவருக்கும் மாறுபடும் .

நெஞ்செரிச்சல், தொண்டை எரிச்சல், நீர்க்கடுப்பு, மூலம், ஒவ்வாமை, நமைச்சல், அரிப்பு, குடல் மற்றும் வாயில் புண், கட்டி, கொப்புளம், குருதி அழுத்தம், தலைவலி , தலைச் சுற்றல், வாந்தி , படபடப்பு முதலானவையும் பித்தம் தொடர்பானது.

இத்தகைய பாதிப்புகள் ஏற்படும்.

நீர்மம்: நீர் தத்துவம்.

சளி, மூச்சிரைப்பு, இழுவை நோய், உள்ளங்கையில் வியர்ப்பது, ஒவ்வாமை, சீதளம், பேதி, ஆறாத புண், நீரிளிவு நோய், கணையம், சிறுநீரகச் செயல்பாடு, தைராய்டு, நுரையீரல் தொற்று, விந்து நீர்த்துப் போதல், மாதவிடாய் சுழற்சியில் மாறுபாடு ஏற்படுதல் இவை அனைத்தும் நீர்மம் சார்ந்தது.

இத்தகைய பாதிப்புகள் ஏற்படும்.

அண்மைய இடுகைகள்

மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்

பங்சாங்கத்தில் உள்ள ஐந்து திறன்களில் யோகமும் ஒன்று. மரண யோகம் - சில கிழமைகளுடன் சில விண்மீன்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகி விடும். எந்தக் கிழமைகளும் எந்த விண்மீன் அப்படிச் சேரும்போது, அந்த ஆகாத...

குருமங்கல யோகம் என்றால் என்ன?

குருமங்கல யோகம் என்றால் என்ன? தமிழகத்தில் செவ்வாய் கோளிற்கு ஜாதகம் மற்றும் ஜோதிடத்தில் பெருமளவில் கவணம் கொடுப்பர். கவணம் பெற்ற செவ்வாயை கண்டால் தமிழக ஜோதிடர்கள் சற்று அய்யத்துடனேயே அதை கையாள்வர். சொல்லப்போனால், செவ்வாய் கிழமையை வெருவாய்...

சுனபா யோகம், அனபா யோகம்

சுனபா யோகம், அனபா யோகம் வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால், வியாழன் 2 ஆம் இடத்தில் இருந்தால் இது சுனபா யோகம். வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால்,...

குரு சந்திர யோகம்

குரு சந்திர யோகம் வியாழனும் நிலவும் சிறப்பான அமைப்பில் இருந்தால் அது தான் இந்த குரு சந்திர யோகம். இத்தகைய யோகம் நம் சாதகத்தில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது மிக எளிது. உங்கள் ஜாதகத்தில் நிலவு...

கஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது?

கஜகேசரி யோகம் கஜம் என்றால் யானை. கேசரி என்றால் அரிமா (சிங்கம்). கஜகேசரி யோகம் என்றால், யானை மற்றும் அரிமாவின் வலிமை பெற்ற ஒரு நிலை என பொருள். கஜகேசரி யோகம் கிடைத்தால் என்ன பயன்? ஒருவருக்கு குறிப்பிட்ட...