முகப்பு பஞ்சாங்கம் நல்ல நேரம் என்றால் என்ன?

நல்ல நேரம் என்றால் என்ன?

ஆசிரியர்

நாள்

பிரிவு

நல்ல நேரம் பார்த்து ஒரு செயலை செய்ய வேண்டும் என்று நம் பெரியவர்கள் அறிவுரை சொல்வார்கள்.

அது என்ன நல்ல நேரம்? கடவுள் படைத்த நேரம் தானே எல்லாம், அதில் நல்ல நேரம் கெட்ட நேரம் என்று இருக்க முடியுமா! என கேட்பவர்களுக்கு விடை என்ன?

இதற்கு, முதலில் ஒரு நாள் பொழுதை எவ்வாராக இந்திறன் கணித்தவர்கள் பிரித்து கணக்கிட்டுள்ளனர் என தெறிந்து கொள்வோம்.

சோதிடத்தில் மொத்தம் 9 கோள்கள் உள்ளன. அவை, ஞாயிறு, திங்கள் (நிலவு), செவ்வாய், அறிவன் (புதன்), வியாழன், வெள்ளி (சுக்), காரி (சனி), இராகு மற்றும் கேது.

இந்த இராகு-கேது இரண்டு கோள்களாக இருப்பினும் இவற்றின் உயிர் ஒன்று. மேலும் உடலையும் மாற்றி அமைத்த கோளாகும். அதாவது தலை மற்றும் உடல் ஒன்றுக்கு ஒன்று மாறி அமைந்துள்ளது. மேலும் அவை சுற்றும் பாதையும் மற்ற கோள்களில் இருத்து முற்றிலும் மாறுபட்டது. அதாவது 90 டிகிரி மாற்றி சுற்றுகிறது.

ஒரு கிழமை (வாரம்) என்பது ஏழு நாட்களை உள்ளடக்கியது.

ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கோள் என ஞாயிறு, திங்கள், செவ்வாய், அறிவன் (புதன்), வியாழன், வெள்ளி (சுக்), காரி (சனி) என கொடுத்துள்ளார்கள்.

7 கோள்களுக்கு நாட்களை கொடுத்தவர்கள் இராகு-கேது ஆகியவற்றிற்கு என ஒரு நாள் பொழுத்தை கொடுக்கவில்லை.

ஒரு நாள் பொழுது என்பது 24 மணி நேரம் கொண்டது. இதில் இரவு 12 மணி நேரம். பகல் 12 மணி நேரம்.

இந்த 12 மணி நேரத்தை 8 பகுதிகளாக பிரித்து, ஒவ்வொறு பகுதிக்கும் 1 மணி நேரம் 30 நிமிடம் என கணக்கிட்டுள்ளனர்.

ஞாயிறு, திங்கள், செவ்வாய், அறிவன், வியாழன், வெள்ளி, காரி என ஒரு கோளுக்கு ஒன்றரை மணி நேரம் என கொடுத்து, கடைசி ஒன்றரை மணி நேரத்தை இராகு-கேதுவிற்கு ஒன்றாக சேர்த்து கொடுத்துள்ளனர்.

இந்த அமைப்பின் சிறப்பு என்னவென்றால், கோளின் பெயர் கொண்ட நாளில் அந்த கோள் 12 மணி நேரத்தில் முதல் ஒன்றரை மணி நேரத்தை தனதாக கொண்டிருக்கும்.

எடுத்துக்காட்டாக, ஞாயிற்று கிழமை, காலை 6 மணி முதல் 7.30 மணிவரை உள்ள நேரம் அந்த நாளின் கோளான ஞாயிறுக்கு என்றும், அதற்கு அடுத்த 7.30 மணி முதல் 9 மணி வரை திங்கள் (நிலவு) அதற்கு அடுத்த ஒரு மணி முப்பது நிமிடத்தை செவ்வாய்க்கும் அதற்கு அடுத்து அறிவனுக்கும் (புதன்) அதற்கு அடுத்து வியாழனுக்கும், அதற்கு அடுத்து வெள்ளிக்கு கொடுத்தார்கள்.

இராகு-கேது நேரம் (இராகு காலம்)

இப்படி கொடுத்தவர்கள் இராகு கேதுவிற்கு நேரம் கொடுக்க வேண்டுமே.

இதற்கு, இராகு கேது ஆகியவற்றின் துவங்கும் முதல் நாள் திங்கள் கிழமை என்று கணித்தார்கள்.

அப்படியானால், திங்கள் கிழமை காலை 6 மணி முதல் 7.30 மணி வரை அது திங்களின் நேரம் என்பதால் அது திங்களுக்கு கொடுக்கப்பட்டது.

அடுத்த நேர பகுதியான 7.30 முதல் 9 மணி வரை உள்ள நேரம் இராகு-கேதுவிற்கு கொடுக்கப்பட்டது.

இந்த கணக்கின் படி,

திங்கள் கிழமை இராகு நேரம் காலை 7.30 – 9.00
சனி கிழமை இராகு நேரம் 09.00 – 10.30
வெள்ளி கிழமை இராகு நேரம் 10.30 – 12.00
புதன் கிழமை இராகு நேரம் பகல் 12.00 – 01.30
வியாழன் கிழமை இராகு நேரம் 01.30 – 03.00
செவ்வாய் கிழமை இராகு நேரம் 03.00 – 04.30
ஞாயிறு கிழமை இராகு நேரம் 04.30 – 06.00

ஒரு நாள் பொழுதில் ராகு-கேது வரும் நேரம் மட்டும் நச்சு தன்மை கொண்ட நேரம். அதை இராகு காலம் என்கிறார்கள்.

எமன் நேரம் (எமகண்டம்)

சோதிட நம்பிக்கையில், எமன், வியாழன் கோளின் மகன்.

எமன், தனக்கென பணி கொண்டவர். அவர் தான் செய்கின்ற வேலகளுக்கு கணக்கு வைத்திருக்க வேண்டும்.

இப்படி, தனக்கென ஒரு பணியை செய்ய பணிக்கப்பட்டிருப்பதால், ஐந்திறனில், அவருக்கு என்று பணி செய்ய ஒரு நேர அளவு கொடுக்கப்பட்டுள்ளது.

வியாழனுக்கு மகன் எமன் என்பதால், தன் தந்தை வியாழனுக்கு உரிய நாளில் அவர் தனது வேலை நேரத்தின் முதல் பகுதியை துவங்குகிறார்.

அதன் படி, வியாழக் கிழமை அன்று தனது நேரத்தை துவக்குகிறார்.

வியாழன் காலை 6.00 – 7.30
அறிவன் (புதன்) 07.30 – 09.00
செவ்வாய் 09.00 – 10.30
திங்கள் 10.30 – 12.00
ஞாயிறு பகல் 12.00 – 01.30
காரி (சனி): 01.30 – 03.00
வெள்ளி : 03.00 – 04.30

அவருக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் எமன் தனது வேலைகளை செய்வார்.

எமன் நேரத்தில் யாராவது நல்ல செயலை செய்ய துணிவார்களா? ஆக, எமனுக்காக கொடுக்கப்பட்ட நேரம் எமகண்டம் ஆயிற்று.

குளிகன் நேரம்

குளிகன், எமன் போன்று ஒரு கோளுக்கு பிறந்த தனி தன்மை வாய்ந்தவர் தான்.

குளிகன் காரி (சனி) கோளின் மகன்.

குளிகனின் சிறப்பு என்னவென்றால், ஒரு செயலுக்கு துணையாக நின்று அந்த செயலை தொடர்ந்து செய்ய தூண்டுவதே.

அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் எந்த செயலை துவங்குகிறீர்களோ அந்த செயலை செய்ய துணையாக நின்று தொடர்ந்து அதை செய்ய வைப்பார்.

எடுத்துக்காட்டாக, வாங்கிய கடனை அடைக்கிறீர்கள் என்றால், குளிகன் நேரம் சிறந்தது. நீங்கள் உஙளின் மற்ற கடன்களையும் அடைக்க துவங்குவீர்கள்.

அதே வேளையில், கடன் வாங்குவதற்கு குளிகன் நேரம் சிறந்தது அல்ல. ஏனெனில், மேலும் கடன் வாங்க வைத்துவிடும்.

ஆக, தொடர்ந்து ஒரு செயலை செய்தால் நல்லது என்றால், அதை குளிகன் நேரத்தில் செய்யுங்கள்.

இதில் துவங்கப்படும் எந்த செயலும் முற்றுப் பெறாது. மீண்டும் மீண்டும் தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

காரியின் மகனாக குளிகன் பிறந்ததால், காரியின் நாளான காரி கிழமை குளிகனின் முதல் நாளாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

அதன் படி

காரி (சனி) கிழமை காலை 06.00 – 07.30
வெள்ளி 07.30 – 09.00
வியாழன் 09.00 – 10.30
அறிவன் (புதன்) 10.30 – 12.00
செவ்வாய் பிற்பகல் 12.00 – 01.30
திங்கள் 01.30 – 03.00
ஞாயிறு 03.00 – 04.30

நல்ல நேரம்

கெட்ட நேரம் எவை என்பதை அறிந்து கொண்டோம். இப்பொழுது நல்ல நேரம் என்றால் என்ன என்று பார்க்கலாம்.

கெட்ட நேரத்தை நீக்கி விட்டு அதில் நல்ல ஓரை வரும் நேரம் நல்ல நேரம் என கணக்கிட வேண்டும்.

கெளரி பஞ்சாங்கம்
கெளரி பஞ்சாங்கம்

கெளரி பஞ்சாங்கத்தில் ஒவ்வொறு கோளுக்கும் ஒரு பலன் என்று கொடுக்கப்பட்டுள்ளது.

1. ஞாயிறு ஓரை: வேலை(உத்தி) யோகம். தொழில் துவங்க சிறப்பு. உயில் எழுத சிறந்த நாள். வேலையில் சேர, துவங்க ஏற்றது

2. திங்கள் ஓரை: அமிர்த்த யோகம். பெண் தேடுவது, உடல் நலம், மகிழ்வான செயல்கள் செய்ய

3. செவ்வாய் ஓரை: பகை (ரோகம்) யோகம். செவ்வாய் என்றாலே படபடப்பு, துணிச்சல். இந்த வேளையில் அமைதி இருக்காது. வேகம் இருக்கும். சண்டை வளர்க்க பகை கொள்ள சரியான நேரம்.

4. அறிவன் (புதன்) ஓரை: வருவாய் (லாபம்) யோகம். அறிவு, ஆற்றல் தருகிற யோகம்.

5. வியாழன் ஓரை: செல்வ (தனம்) யோகம். பொருள் வாங்க, முதலீடு செய்ய

6. வெள்ளி ஓரை: செல்வம் அனுபவி (சுகம்) யோகம். திருமண ஏற்பாடு செய்ய, மகிழ்வாக கொண்டாட

7. சனி ஓரை: கொடிய (சோரம்) யோகம். ஆனாலும் நிலம் பற்றி பேசலாம்.

8. நச்சு யோகம். நிதானம் தவறும்.

இப்பொழுது ஒவ்வொரு கோளுக்கும் ஒரு யோகம் என்று குறித்து அவற்றின் பயன் என்ன என்று பார்த்தோம்.

இதை கெளரி பஞ்சாங்க யோகங்கள் என்று சொல்கிறார்கள்.

ஏற்கனவே சொன்னது போல, ஒவ்வொறு நாளுக்கும் ஒரு கோள் உரிமை என்று அதில் அந்த கோளுக்கான நேரம் துவங்குகிறது.

நல்ல நேரம் பார்க்கும் பொழுது ராகு நேரம், செவ்வாய் நேரம், காரி நேரம் என பகல் பொழுதில் மொத்தம் நான்கரை மணி நேரம் சரியில்லாத நேரமாக இருக்கும்.

மீதமுள்ள நேரத்தில் குளிகன், எமகண்டம் என மேலும் 3 மணி நேரம் நீங்கிவிடும்.

கெளரி பஞ்சாங்கமும் ஓரைகளும்.

பொதுவாக நாம் பயன்படுத்தும் ஐந்திறன் நாள் காட்டிகளின் படி ஒரு கோளுக்கு ஒன்றரை மணி நேரம் ஆட்சி நேரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு சற்று மாறாக கெளரி பஞ்சாங்க முறையில் ஒவ்வொரு நாளும் ஞாயிறு தோன்றும் நேரம் முதல் ஒரு மணி நேரம் அளவில் ஒவ்வொரு கோளுனுடைய நேரம் நடைபெறும்.

அந்த நேரத்தை ஓரை என்று சொல்வர். இதில் நேர அளவு மட்டுமே வேறுபாடு.

மற்ற கணக்கிடும் முறைகள் எல்லாம் ஒன்றே.

ஓரை கணக்கு முறையில் ஞாயிறு, செவ்வாய், காரி (சனி) ஓரைகள் சிறந்த நேரம் அல்ல.

அதே போல கெளரி ரோகம், சோரம், நச்சு என்று இருக்கக் கூடாது.

ஆக மீதமாக நேரத்தில் அதற்குள் ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரம் வரும் நல்ல ஓரை தான் அன்றைய நல்ல நேரம் ஆகும்.

காலை 6 முதல் நடுபகல் 12 மணி வரை:
கெளரி ஓரை
திங்கள்
காலை 6 முதல் 7 வரை அமிர்த திங்கள்
(நிலவு)
லாப வெள்ளி
புதன்
காலை 9 முதல் 10 வரை அமிர்த வியாழன்
வியாழன்
காலை 10:30 முதல் 11 வரை லாப அறிவன் (புதன்)
காலை 11 முதல் 12 வரை லாப திங்கள்
(நிலவு)
வெள்ளி
காலை 10 முதல் 10:30 வரை அமிர்த வியாழன்

 

காலை 6 முதல் நடுபகல் 12 மணி வரை:
ஞாயிறு ஓரை
காலை   7 முதல் 8 வரை உத்தம வெள்ளி
காலை   8 முதல் 9 வரை உத்தம அறிவன் (புதன்)
காலை   11 முதல் 12 வரை அமிர்த வியாழன்
செவ்வாய்
காலை   8 முதல்   9 வரை உத்தம வெள்ளி
காலை   10:30 முதல் 11 வரை லாப திங்கள்
(நிலவு)
சனி
காலை   7:30 முதல் 8   வரை அமிர்த வியாழன்
காலை   10:30 முதல் 11   வரை உத்தம வெள்ளி
காலை   11 முதல் 12   வரை உத்தம அறிவன் (புதன்)

 

நடுபகல் 12-க்கு மேல் மாலை 6 மணி வரை:
கெளரி ஓரை
புதன்
நடுபகல் 1:30 முதல் 2   வரை சுப அறிவன் (புதன்)
நடுபகல் 4 முதல்     5 வரை தன, அமிர்த வியாழன்
வியாழன்
நடுபகல் 1   முதல்   1:30   வரை அமிர்த வியாழன்
வெள்ளி
நடுபகல் 1   முதல் 3 வரை லாப, சுக வெள்ளி, அறிவன் (புதன்)
ஞாயிறு
நடுபகல் 2 முதல்     3 வரை தன வெள்ளி
செவ்வாய்
நடுபகல் 4 முதல்   மாலை 6 வரை லாப அறிவன் (புதன்)திங்கள்
(நிலவு)
சனி
நடுபகல் 4   முதல் மாலை 6 வரை தன, லாப வெள்ளி, அறிவன் (புதன்)

 

மாலை 6-க்கு மேல் இரவு 9 மணி வரை:
கெளரி ஓரை
புதன்
இரவு   7 முதல்   7:30 வரை லாப வெள்ளி
வியாழன்
மாலை 6   முதல் 7 வரை சுக திங்கள்
(நிலவு)
ஞாயிறு
மாலை 6 முதல் 7 வரை அமிர்த வியாழன்
செவ்வாய்
இரவு 7:30   முதல் 8 வரை உத்தம வியாழன்
சனி
இரவு 7:30   முதல்   8 வரை உத்தம திங்கள்
(நிலவு)

 

இவ்வாராக நல்ல நேரம் என்பது ஒரு நாள் பொழுதில் 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை மட்டுமே இருக்கும்.

மேலும், ஒரு நல்ல செயலை செய்ய முயலும் போது, அந்த நாள் கரி நாளாக இருக்கக் கூடாது.

அஷ்டமி, நவமி ஆகிய நிலவின் நிலைகளையும் தவிர்க்க வேண்டும்.

அன்றைய நாள் மரண யோகம் கொண்ட நாளாக இருக்கக் கூடாது.

வேலையை துவங்குபவருக்கு அன்றைய நாள் சந்திராஷ்டம நாளாக இருக்கக் கூடாது.

தமிழராக இருந்தா, எந்த செயலை செய்வதாக இருப்பினும், முருகனை கும்பிட்டு விட்டு, அதன் பின் குல தெய்வத்தை வணங்க வேண்டும்.

அதற்கு அடுத்ததாகத் தான் பிள்ளையார் உள்பட பிற தெய்வங்களை வணங்கலாம்.

இந்த விதி முறைகளை மீறினால் குல தெய்வ பழிப்புக்கு ஆளாக நேரிடும்.

அண்மைய இடுகைகள்

மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்

பங்சாங்கத்தில் உள்ள ஐந்து திறன்களில் யோகமும் ஒன்று. மரண யோகம் - சில கிழமைகளுடன் சில விண்மீன்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகி விடும். எந்தக் கிழமைகளும் எந்த விண்மீன் அப்படிச் சேரும்போது, அந்த ஆகாத...

குருமங்கல யோகம் என்றால் என்ன?

குருமங்கல யோகம் என்றால் என்ன? தமிழகத்தில் செவ்வாய் கோளிற்கு ஜாதகம் மற்றும் ஜோதிடத்தில் பெருமளவில் கவணம் கொடுப்பர். கவணம் பெற்ற செவ்வாயை கண்டால் தமிழக ஜோதிடர்கள் சற்று அய்யத்துடனேயே அதை கையாள்வர். சொல்லப்போனால், செவ்வாய் கிழமையை வெருவாய்...

சுனபா யோகம், அனபா யோகம்

சுனபா யோகம், அனபா யோகம் வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால், வியாழன் 2 ஆம் இடத்தில் இருந்தால் இது சுனபா யோகம். வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால்,...

குரு சந்திர யோகம்

குரு சந்திர யோகம் வியாழனும் நிலவும் சிறப்பான அமைப்பில் இருந்தால் அது தான் இந்த குரு சந்திர யோகம். இத்தகைய யோகம் நம் சாதகத்தில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது மிக எளிது. உங்கள் ஜாதகத்தில் நிலவு...

கஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது?

கஜகேசரி யோகம் கஜம் என்றால் யானை. கேசரி என்றால் அரிமா (சிங்கம்). கஜகேசரி யோகம் என்றால், யானை மற்றும் அரிமாவின் வலிமை பெற்ற ஒரு நிலை என பொருள். கஜகேசரி யோகம் கிடைத்தால் என்ன பயன்? ஒருவருக்கு குறிப்பிட்ட...