முகப்பு பஞ்சாங்கம் திதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன?

திதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன?

ஆசிரியர்

நாள்

பிரிவு

திதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன?

திதி, தேதி என்ற வட மொழி மற்றும் தெலுங்கர் மொழி சொற்களுக்கு தமிழில் நாள் என்று பொருள்.

திதி என்றால் நாள். நாம் நாட்களை நிலவின் நிலையை கொண்டு கணக்கிடுவதால், வளர்பிறை நாள் (திதி) , தேய்பிறை நாள் (திதி) என்று அழைக்கிறோம்.

முழு நிலவு நாளை வட மொழியில் பெளர்ணமி என்கிறார்கள். புது நிலவு நாளை வட மொழியில் அம்மாவசியா என்று அழைக்கிறார்கள்.

புது நிலவில் நாள் துவங்கி முழு நிலவு வரை உள்ள 15 நாட்களை வளர்பிறை நாட்கள் (திதி) என்றும் முழு நிலவில் துவங்கி புது நிலவு நாள் வரை உள்ள 15 நாட்களை தேய்பிறை நாட்கள் (திதி) என்றும் அழைக்கிறார்கள்.

1. புது நிலவு மற்றும் முழு நிலவிற்கு அடுத்த நாளை பிரதமை என்று சொல்வார்கள். பிரதமை என்றால், PRIME, அதாவது முதன்மை என்று பொருள் படும். முதல் நாள். அவ்வளவு தான். Prime Minister – பிரதம மந்திரி என்ற வட மொழி சொல்லிற்கு முதன்மை அமைச்சர் என்று சொல்கிறோம் அல்லவா!

ஆக, தேய்பிறை பிரதமை என்றால், முழு நிலவிற்கு அடுத்த முதல் நாள்.

வளர்பிறை பிரதமை என்றால், புது நிலவிற்கு அடுத்த முதல் நாள்.

2. இரண்டாம் நாளை துவிதை என்று அழைக்கிறார்கள். துவி என்ற சமற்கிருத சொல்லிற்கு இரண்டு என்று பொருள்.

3. திரி என்றால் மூன்று என்று நமக்கு நன்றாக தெரியும். அது தான் திரிதியை ஆயிற்று. மூன்றாம் நாள்.

4. சதுரம் என்றால் நான்கு பக்கம் என்று பொருள் வருகிறதா. அது தான் சதுர்த்தி என்கிறார்கள். அதாவது நான்காம் நாள்.

5. பஞ்சாப் என்றால் ஐந்து ஆறுகள் ஓடும் மாநிலம் என நமக்கு நன்றாக பள்ளிகளில் சொல்லி கொடுத்திருக்கிறார்கள். பாஞ் என்றால் ஐந்து. பஞ்சமி என்றால் ஐந்தாம் நாள்.

6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.

7. சப்த ஸ்வரங்கள் என்று இசையில் குறிப்பிடுகிறார்களே? அதாவது ஏழு ஓசைகள் என்று. அது தான் சப்தமி என்றால் ஏழாம் நாள்.

8. அஷ்ட லட்சுமி, அஷ்ட கோணல் எல்லாம் கேள்வி பட்டிருப்பீர்கள். அஷ்ட என்றால் எட்டு. அது தான் அஷ்டமி என்றால் எட்டாம் நாள்.

9. நவ நாள் என்று இறை வழிபாட்டில் ஒன்பது நாட்கள் ஆலயம் வந்து வழிபடுவதை சொல்வார்கள். ஒன்பது கோள்களை, தமிழர் அல்லாதோர் நவ கிரகம் என்று சொல்ல கேட்டதில்லையா? நவமி என்றால் ஒன்பதாம் நாள்.

10. தச என்றால் பத்து. கமல் நடித்த தசாவதாரத்தில் பத்து மாறுபட்ட வேடங்களில் நடித்திருந்தார் அல்லவா. ஆக தசமி என்றால் பத்தாம் நாள்.

11. ஏக் என்றால் ஒன்று. தஸ் என்றால் பத்து. ஆக ஏக்-தஸ் என்பது ஏகாதசி. அப்படியென்றால் அது பதினொன்றாம் நாள்.

12. துவி என்றால் சமற்கிருதத்தில் இரண்டு என பொருள். ஆகா துவி+தஸ் என்பது பன்னிரண்டாம் நாள் ஆகும்.

13. திரி+தஸ் = திரியோதசி. நீங்களே சொல்வீர்கள் அது பதிமூன்றாம் நாள் என்று.

14. சதுரம் என்றால் நான்கு. அதனுடம் இந்த தசி என்கிற தஸ் சேர்ந்து சதுர்த்தசி என்பதால் அது பதினான்காம் நாள்.

இவ்வளவு தான் இந்த திதி என்கிற நாட்களில் மறைந்துள்ள பெயர்களுக்கான விளக்கம்.

நமக்கு எதற்கு வட மொழி? நம் மூத்த தமிழ் குடி மொழியாம் தமிழில் ஆறுடம் பயிலலாமே!!!

 

அண்மைய இடுகைகள்

மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்

பங்சாங்கத்தில் உள்ள ஐந்து திறன்களில் யோகமும் ஒன்று. மரண யோகம் - சில கிழமைகளுடன் சில விண்மீன்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகி விடும். எந்தக் கிழமைகளும் எந்த விண்மீன் அப்படிச் சேரும்போது, அந்த ஆகாத...

குருமங்கல யோகம் என்றால் என்ன?

குருமங்கல யோகம் என்றால் என்ன? தமிழகத்தில் செவ்வாய் கோளிற்கு ஜாதகம் மற்றும் ஜோதிடத்தில் பெருமளவில் கவணம் கொடுப்பர். கவணம் பெற்ற செவ்வாயை கண்டால் தமிழக ஜோதிடர்கள் சற்று அய்யத்துடனேயே அதை கையாள்வர். சொல்லப்போனால், செவ்வாய் கிழமையை வெருவாய்...

சுனபா யோகம், அனபா யோகம்

சுனபா யோகம், அனபா யோகம் வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால், வியாழன் 2 ஆம் இடத்தில் இருந்தால் இது சுனபா யோகம். வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால்,...

குரு சந்திர யோகம்

குரு சந்திர யோகம் வியாழனும் நிலவும் சிறப்பான அமைப்பில் இருந்தால் அது தான் இந்த குரு சந்திர யோகம். இத்தகைய யோகம் நம் சாதகத்தில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது மிக எளிது. உங்கள் ஜாதகத்தில் நிலவு...

கஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது?

கஜகேசரி யோகம் கஜம் என்றால் யானை. கேசரி என்றால் அரிமா (சிங்கம்). கஜகேசரி யோகம் என்றால், யானை மற்றும் அரிமாவின் வலிமை பெற்ற ஒரு நிலை என பொருள். கஜகேசரி யோகம் கிடைத்தால் என்ன பயன்? ஒருவருக்கு குறிப்பிட்ட...