முகப்பு ஜாதகம் ஜாதகத்தில் செவ்வாய் எங்கு இருக்கக் கூடாது?

ஜாதகத்தில் செவ்வாய் எங்கு இருக்கக் கூடாது?

ஆசிரியர்

நாள்

பிரிவு

செவ்வாய், ஜாதக கணிப்புகளின் படி நல்லவை செய்யும் கோள். அது ஒரு நெருப்பு கோள்.

ஜாதகத்தில் செவ்வாய் சில இராசிக்காரர்களுக்கு நல்ல பலனை கொடுத்தாலும், சிலருக்கு இதன் இராசி அல்லது லக்னத்தில் இருக்கும் நிலை தீங்கை விளைவிக்கும்.

யார் யாருக்கு ஜாதகத்தில் செவ்வாய் தீங்கு விளைவிக்கும் என காணலாம்:

செவ்வாய் லக்னத்தில் இருந்தால் முன் பின் தெறியாதவர்களால் தாக்கப்பட்டு வெட்டு காயம் ஏற்படும். திருடர்களாலும், எதிரிகளாலும் இந்த காயம் வரலாம். வாழ்வில் ஒருமுறையாவது உடலில் வெட்டுக்காயம் விழும்.

மேலும் லக்னத்தில் இருக்கும் செவ்வாயால் உடல் அளவில் ஏற்படும் பாதிப்புகளும், பெற்றோரிடம் அன்பு இல்லாமை, கண் பார்வை பாதிப்பு, தலையில் காயம், நெருப்பால் காயம், தீர்வு இல்லாத உடல் நோய், மூட சிந்தனை, எதை கண்டாலும், யாரை கண்டாலும் மனதில் அச்சம், சின்ன சின்ன பாதிப்புகளை கூட பெரிதாக எடுத்துக் கொண்டு அதற்காக பயந்து வாழ்தல், தன் நலம் மட்டும் பார்பதால் பிறரால் வெறுக்கப்படுவது, தற்புகழ்ச்சி முதலியன ஏற்படும்.

செவ்வாய் 2ல் இருந்தால் வாயால் கேடு வரும். இவர்களுக்கு வாய் சொற்களை கட்டுப்படுத்த தெரியாது. எங்காவது வாயை கொடுத்து புண் வாங்கி வருவார்கள்

மேலும் குடும்பம் செலவுகளை கட்டுப்படுத்த தெரியாமல் பல சிக்கல்கள் வந்து சேரும். ஊதாரியாக செலவு செவார்கள், சிந்திக்காமல், மனதில் நினைப்பதை அப்படியே ஒழிவு மரைவு இன்றி வெளிப்படையாக பேசுவதால் சிக்கல், முன்னோர் சொத்துக்கள் கிடைப்பதில் சிக்கல் வரும்.

செவ்வாய் 3ல் இருந்தால் உடன் பிறந்தோர் வகையில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும்.

செவ்வாய் 4ல் இருந்தால் உடல் நலத்தில் கேடு மற்றும் இல்லர வாழ்வில் செழிப்பின்றி பல இன்னல்கள் வந்து சேரும்.

இவர்களுக்கு மார்பு வலி, இதய நோய், வண்டியில் செல்லும் போது பெரும் விபத்து, கல்வியை பாதியில் விடும் நிலை, உறவினர்களால் வெருக்கப்படுதல், பெற்றவளின் மன வருத்தம், சொந்த வீடு மற்றும் சொத்துக்கள் சேர்ந்தாலும் மனதில் மகிழ்ச்சியில்லாத நிலை முதலியன ஏற்படும்.

செவ்வாய் 5ல் இருந்தால் பிள்ளை பேறு இல்லாத நிலை அல்லது பீள்ளைகள் பெருவதில் சிக்கல் வரும்.

செவ்வாய் 6ல் இருந்தால் குருதி தொடர்பான நோய் வரும். எதிரிகளால் நாளது பொழுதும் தொல்லை ஏற்படும்.

செவ்வாய் 7ல் இருந்தால் மனைவியால் ஏற்படும் காவல் நிலையம் வரை செல்ல நேரிடும். வாழ்க்கைத் துணை, திருமணம் வாழ்கை,ஆகியவற்றில் பல சிக்கல்கள் வரும். குறுக்கு புத்தி, முன் கோபம், சூதாட்ட ஆர்வம், வாழ்க்கையில் போராட்டம் ஆகிய பாதிப்புகள் வரும்.

செவ்வாய் 8ல் இருந்தால் பாலின உறுப்புகளில் ஏற்படு்ம் பிரச்சனை .ஆயுள் குறைபாடு, பெண்ணிற்கு இருந்தால் கனவன் இரப்பு, ஊறவினர்களிடம்
வெறுப்பு ,திருமண வாழ்வில் சண்டை, மூலத்தில் நோய் ஏற்படும்.

செவ்வாய் 12ல் இருந்தால் உடல் உறவில் மகிழ்வு இருக்காது. ஆணிற்கு செவ்வாய் 12ல் இருந்தால் மனைவி சிறு வயதிலேயே இரப்பு அல்லது மன முறிவு ஏற்படும்.

அண்மைய இடுகைகள்

மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்

பங்சாங்கத்தில் உள்ள ஐந்து திறன்களில் யோகமும் ஒன்று. மரண யோகம் - சில கிழமைகளுடன் சில விண்மீன்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகி விடும். எந்தக் கிழமைகளும் எந்த விண்மீன் அப்படிச் சேரும்போது, அந்த ஆகாத...

குருமங்கல யோகம் என்றால் என்ன?

குருமங்கல யோகம் என்றால் என்ன? தமிழகத்தில் செவ்வாய் கோளிற்கு ஜாதகம் மற்றும் ஜோதிடத்தில் பெருமளவில் கவணம் கொடுப்பர். கவணம் பெற்ற செவ்வாயை கண்டால் தமிழக ஜோதிடர்கள் சற்று அய்யத்துடனேயே அதை கையாள்வர். சொல்லப்போனால், செவ்வாய் கிழமையை வெருவாய்...

சுனபா யோகம், அனபா யோகம்

சுனபா யோகம், அனபா யோகம் வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால், வியாழன் 2 ஆம் இடத்தில் இருந்தால் இது சுனபா யோகம். வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால்,...

குரு சந்திர யோகம்

குரு சந்திர யோகம் வியாழனும் நிலவும் சிறப்பான அமைப்பில் இருந்தால் அது தான் இந்த குரு சந்திர யோகம். இத்தகைய யோகம் நம் சாதகத்தில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது மிக எளிது. உங்கள் ஜாதகத்தில் நிலவு...

கஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது?

கஜகேசரி யோகம் கஜம் என்றால் யானை. கேசரி என்றால் அரிமா (சிங்கம்). கஜகேசரி யோகம் என்றால், யானை மற்றும் அரிமாவின் வலிமை பெற்ற ஒரு நிலை என பொருள். கஜகேசரி யோகம் கிடைத்தால் என்ன பயன்? ஒருவருக்கு குறிப்பிட்ட...