முகப்பு பஞ்சாங்கம் குளிகன் என்றால் என்ன?

குளிகன் என்றால் என்ன?

ஆசிரியர்

நாள்

பிரிவு

குளிகன் என்றால் என்ன?

ஐந்திறன் நாள் காட்டி பயன்படுத்தும் பொழுது நாம் குளிகன் என்று ஒன்று இருப்பதை கவணித்திருப்போம்.

குளிகன் என்பது ராகு, கேது போன்று ஒரு சாயா கோள் ஆகும். இதை காரி கோளின் மகன் என்று அழைப்பார்கள்.

குளிகனை மாந்தி என்றும் அழைப்பர்.

குளிகன் ஒவ்வொறு நாளும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தோன்றும்.

நாள்              பகல்                 இரவு

ஞாயிறு      26 நாழிகை        10 நாழிகை

திங்கள்       22 நாழிகை        06 நாழிகை

செவ்வாய்  18 நாழிகை         02 நாழிகை

அறிவன்     14 நாழிகை        26 நாழிகை

வியாழன்    10 நாழிகை       22 நாழிகை

வெள்ளி     06 நாழிகை         18 நாழிகை

காரி           02 நாழிகை         14 நாழிகை

பகல் மற்றும் இரவு என ஒரு நாளைக்கு இரு முறை இந்த குளிகன் தோன்றும்.

ஒரு ஜாதகரின் ராசி சக்கிரத்தில் குளிகன் அவர் பிறந்த நேரத்தை பொருத்து அமையும். அவர் பிறந்த நேரத்தில் இந்த குளிகன் தோன்றி இருக்க வேண்டியதில்லை.

அதாவது, அன்றைய நாளில் குளிகன் தோன்றும் நேரத்தில் என்ன ராசி இருக்கிறதோ அதுவே ஜாதகரின் குளிகன் ஆகும்.

ஜாதகர் பகலில் பிறந்தார் என்றால், குளிகன் பகலில் தோன்றும் நேரத்தை வைத்தும், இரவு என்றால் இரவில் தோன்றும் நேரத்தை வைத்தும் கணக்கிடவும்.

தமிழகத்தில் இந்த குளிகனுக்கு அவ்வளவு சிறப்பு நிலை கொடுப்பதில்லை.

குளிகனை கொண்டு ஜாதகரின் குண நலங்களை கணிக்கிறார்கள்.

குளிகன் இருக்கும் இராசி மற்றும் கோள் கெடு பலன்களை தரும் என்பது ஜோதிட கூற்று.

குளிகன் ஒருவரின் லக்னத்தில் இருந்தால் அவரின் உடல் நலம் கெடும்.

லக்னத்திற்கும் இரண்டில் இருந்தால் பிறர் துன்பம் கண்டு மகிழ்பவராக இருப்பர்..

மூன்றில் என்றால் உடன் பிறந்தவர்களை விட்டு பிரிந்து வாழ்வர். பெற்றோரை கவணிக்க மாட்டார்கள்.

நான்கு என்றால் மனம் அமைதியாக இருக்காது. அலை பாயும் மனதுடன் வாழ்வார்கள்.

ஐந்தில் உள்ளவர்கள் முதியவர்களை மதிக்காமல் வாழ்வர். குழந்தை இருக்காது.

ஆறில் என்றால், உறவுகளுடன் பகை கொண்டு வாழ்வர்.

ஏழு என்றால் வாழ்க்கை துணையை விட்டு பிரிந்து வாழ்வர். வாழ்வு தீய நிலையில் துன்பம் நிரைந்ததாக இருக்கும்.

எட்டு என்றால் செல்வம் சேராது. ஏழ்மையே மிஞ்சும்.

ஒன்பதில் இருந்தால் கடவுள் நம்பிக்கை அற்றவராக வாழ்வர்.

பத்தில் உள்ளவர்கள் புகழோடு கூடி வாழ்வர். பேரும் புகழும் கிடைக்கும்.

பதினொன்றில் வருவாய் சிறப்பாக இருக்கும்.

பன்னிரெண்டில் மன அமைதி அற்று வாழ்வர்.

மேலும் குளிகன் 4 அல்லது 10 வீட்டில் நிலவுடன் சேர்ந்தால் பெற்றவள் மடிவாள்.

குளிகன் 9 அல்லது 3 வீட்டில் ஞாயிறுடன் கூடினால் தகப்பன் மடிவான்.

அண்மைய இடுகைகள்

துவி துவாதச தோஷம் என்றால் என்ன?

துவி துவாதச தோஷம் என்றால் என்ன? திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது துவி துவாதச தோஷம் பார்க்க வேண்டும் என சில சோதிடர்கள் கூறுவதையும், சிலர் அந்தகைய தோஷம் பார்க்க தேவை இல்லை என...

லக்னம் என்றால் என்ன?

லக்னம் என்றால் என்ன? லக்னம் என்பது, குழந்தை பிறக்கின்ற நேரத்தில் என்ன ராசி இருக்கிறதோ அது தான் குழந்தையில் லக்னம். விண்மீன்களை வைத்து நாம் பிறந்த இராசியை கணிக்கிறோம். பிறந்த ராசி என்பது அப்பொழுதைய விண்மீன்...

குளிகன் என்றால் என்ன?

குளிகன் என்றால் என்ன? ஐந்திறன் நாள் காட்டி பயன்படுத்தும் பொழுது நாம் குளிகன் என்று ஒன்று இருப்பதை கவணித்திருப்போம். குளிகன் என்பது ராகு, கேது போன்று ஒரு சாயா கோள் ஆகும். இதை காரி கோளின்...

அலியாக சிலர் பிறப்பது எதனால்?

அலியாக சிலர் பிறப்பது எதனால்? உயிர் இனங்கள் அனைத்தும் ஆண் அல்லது பெண் குறிகளுடன் பிறக்கையில் சிலர் மட்டும் இரண்டும் கலந்து பிறக்கிறார்கள். ஏன் சிலர் மட்டும் இப்படி அலியாக பிறக்கிறார்கள். இதற்கு சோதிடம், லக்கினத்தில் அமையும்...

நாடி பொருத்தம் பார்ப்பதால் என்ன பயன்?

நாடி பொருத்தம் பார்ப்பதால் என்ன பயன்? நாடி பொருத்தம் பார்த்து மனம் முடித்தால் நோய் நொடி இல்லாமல் வாழலாம் என்கிறது சோதிடம். இந்த நாடி பொருத்தம் ஆண் பெண் இருவரின் குருதிகள் ஒற்றுமையுடம் உள்ளதா என...