முகப்பு ஜாதகம் குருமங்கல யோகம் என்றால் என்ன?

குருமங்கல யோகம் என்றால் என்ன?

ஆசிரியர்

நாள்

பிரிவு

குருமங்கல யோகம் என்றால் என்ன?

தமிழகத்தில் செவ்வாய் கோளிற்கு ஜாதகம் மற்றும் ஜோதிடத்தில் பெருமளவில் கவணம் கொடுப்பர்.

கவணம் பெற்ற செவ்வாயை கண்டால் தமிழக ஜோதிடர்கள் சற்று அய்யத்துடனேயே அதை கையாள்வர்.

சொல்லப்போனால், செவ்வாய் கிழமையை வெருவாய் கிழமை என்று வளக்கில் சொல்வது உண்டு. அதனால் அந்த செவ்வாய்க்குறிய நாளில் எந்த செயலையும் முன்னெடுக்க மாட்டார்கள். குறிப்பாக திருமணம் போன்ற நல்ல செயல்களை செவ்வாய் கிழமை செய்ய மாட்டார்கள்.

இதற்கு மாற்றாக, பிற மாநிலங்களில் செவ்வாய் கிழமை திருமணத்திற்கு மிகவும் ஏற்ற நாளாக பார்க்கப்படுகிறது.

செவ்வாயின் பார்வை அல்லது அதன் இடம் வைத்து ஒரு யோகமே இருக்கிறது. அதுதான் இந்த குருமங்கல யோகம்.

செவ்வாயும் வியாழனும் சேர்ந்திருந்தால் அல்லது ஒருவரையொருவர் பார்த்தாலும் இந்த யோகம் ஏற்படும்.

ஒரே வீட்டில் செவ்வாயும் வியாழனும் இருந்தால் அது குருமங்கல யோகம். செவ்வாய் இருக்கும் இடத்தை ஒன்று என வைத்து எண்ண துவங்கினால் 7ம் இடத்தில் வியாழன் இருந்தால் குருமங்கல யோகம்.

குருமங்கல யோகம் இருப்பதால் என்ன பயன்?

தானாகவே வீடு, மனை, வண்டி என யோகத்தைத் தரும்.

உங்கள் ஜாதகத்தில் இந்த யோகம் இருந்தால், உங்கள் தந்தை வீடு அல்லது நிலம் வாங்கியிருப்பார்.

அதேபோல, ஒன்றுக்கும் மேற்பட்ட வீடு, மனை, வண்டி என யோகம் இருக்கும்.

எந்தத் துறையில் இந்த ஜாதக்காரர் இருந்தாலும் யாருக்கும் அச்சப்படாமல் மன திடத்துடன் தமது என்னங்களை வெளிப்படையாக தெரிவிப்பார்.

யாருக்கும் தலை வணங்கமாட்டார். “திமிர் பிடித்தவன்” என்ற பெயரையும் இந்த யோகம் பெற்றுத் தரும்.

இந்த யோகம் உள்ளவர்கள் பொருளாதாரத்தைப் பற்றிய கவலையே படத் தேவையில்லை.

கேட்டதும் கிடைக்கும், கேட்காததும் கிடைக்கும். அதாவது உலகின் நல்லன எல்லாமும் இந்த யோகக்காரரை தேடி வரும்!

அண்மைய இடுகைகள்

மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்

பங்சாங்கத்தில் உள்ள ஐந்து திறன்களில் யோகமும் ஒன்று. மரண யோகம் - சில கிழமைகளுடன் சில விண்மீன்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகி விடும். எந்தக் கிழமைகளும் எந்த விண்மீன் அப்படிச் சேரும்போது, அந்த ஆகாத...

குருமங்கல யோகம் என்றால் என்ன?

குருமங்கல யோகம் என்றால் என்ன? தமிழகத்தில் செவ்வாய் கோளிற்கு ஜாதகம் மற்றும் ஜோதிடத்தில் பெருமளவில் கவணம் கொடுப்பர். கவணம் பெற்ற செவ்வாயை கண்டால் தமிழக ஜோதிடர்கள் சற்று அய்யத்துடனேயே அதை கையாள்வர். சொல்லப்போனால், செவ்வாய் கிழமையை வெருவாய்...

சுனபா யோகம், அனபா யோகம்

சுனபா யோகம், அனபா யோகம் வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால், வியாழன் 2 ஆம் இடத்தில் இருந்தால் இது சுனபா யோகம். வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால்,...

குரு சந்திர யோகம்

குரு சந்திர யோகம் வியாழனும் நிலவும் சிறப்பான அமைப்பில் இருந்தால் அது தான் இந்த குரு சந்திர யோகம். இத்தகைய யோகம் நம் சாதகத்தில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது மிக எளிது. உங்கள் ஜாதகத்தில் நிலவு...

கஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது?

கஜகேசரி யோகம் கஜம் என்றால் யானை. கேசரி என்றால் அரிமா (சிங்கம்). கஜகேசரி யோகம் என்றால், யானை மற்றும் அரிமாவின் வலிமை பெற்ற ஒரு நிலை என பொருள். கஜகேசரி யோகம் கிடைத்தால் என்ன பயன்? ஒருவருக்கு குறிப்பிட்ட...