முகப்பு திருமண பொருத்தம் ஜாதகத்தின் படி யார் கள்ளக்காதல் வைத்திருப்பர்?

ஜாதகத்தின் படி யார் கள்ளக்காதல் வைத்திருப்பர்?

ஆசிரியர்

நாள்

பிரிவு

ஜாதகத்தை கொண்டு யாருக்கெள்ளாம் கள்ளக் காதலன் அல்லது காதலி இருப்பார்கள் என்பதை எளிதில் கண்டறிய முடியும்.

செவ்வாய் தோஷம் உள்ள பெண் செவ்வாய் தோஷம் இல்லாத ஆணை மனம் முடித்தால் அவள் கள்ளக்காதலன் வைத்திருப்பதற்கான வாய்புகள் கூடுதல்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் மூன்றாமிடத்து இறைவன் தீய கோளாகி அதனுடன் பாம்பு கோள் என்று சொல்லக்கூடிய ராகு அல்லது கேது, எந்த இடத்தில் சேர்ந்து இருந்தாலும் தாலி கட்டிய கனவனை விட்டு வேறு ஒரு ஆணுடன் கூடி குலவுவாள்.

பொதுவாக இத்தகைய பெண்களின் கனவர் இவர்களை விட இளையவர்களாகவும், இந்த பெண்ணிற்கு கீழ் பனிந்து வாழ்பவர்களாகவும் இருப்பர்.

ஜாதகத்தில்

வியாழன் மற்றும் வெள்ளி, இவை இரண்டும் இணைந்து பாவ கோளை பார்த்தால் அல்லது நீச்ச சேர்க்கை ஏற்பட்டால் கமுக்கமான கள்ள உறவுகள் அந்த ஜாதககாரருக்கு ஏற்படலாம்.

லக்னத்தில் இருந்து 8 ம் இடத்தில் வியாழன் அல்லது வெள்ளி இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் காதல் கொள்வதற்கான, கள்ளக்காதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

பெண்களின் ஜாதகத்தில் நான்காம் வீட்டில் பாவ கோள்கள், நீச்ச கோள்கள், தீய கோள்கள் இருந்தாலும், பார்த்தாலும் கூடா நட்பு என்கிற கள்ளக்காதல் தேடி வரும்.

ஆண் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்து 10 ஆம் இடத்தில் அறிவன் (புதன்) இருந்தால் தன்னை விட வயதில் மூத்த பெண்ணுடன் உறவில் இருப்பார்.

ஆண் ஜாதகத்தில் 7 ஆம் வீட்டில் நீச்ச கோள் இருந்தால் ஒழுக்க கேடு உடைய்வராக எந்தப் பெண்ணிடமு தீய சிந்தனை கொண்டு பழகுவார்.

ஆண் ஜாதகத்தில் 7 ஆம் வீட்டில் காரி (சனி) மற்றும் வெள்ளி இருந்தால், ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த பெண்ணுடன் தொடர்பில் இருப்பார்.

கள்ளக்காதலுக்காக கொலை

ஆண், பெண் என எந்த ஜாதகமாக இருந்தாலும், விருச்சிக இராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை வெறி பிடித்து இருக்கும்.

அதே விருச்சிக இராசியில் வெள்ளி (சுக்கிரன்) இருந்தால், காதலுக்காக கொலை செய்யவும் துணிவார்கள்.

அதே விருச்சிக இராசியில் வெள்ளியும், செவ்வாயும் கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால் காதல் வேட்கை வெறி தீவிரமாக இருக்கும்.

இத்தகைய ஜாதகக்காரர்கள் காதல் வேட்கையை தீர்த்துக்கொள்ள எந்த எல்லை வரை போகவும் தயங்கமாட்டார்கள்.

கற்பழிப்பு, கொலை, கடத்தல், என எதையும் செய்வார்கள், தம் வெறி அடங்க.

அண்மைய இடுகைகள்

மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்

பங்சாங்கத்தில் உள்ள ஐந்து திறன்களில் யோகமும் ஒன்று. மரண யோகம் - சில கிழமைகளுடன் சில விண்மீன்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகி விடும். எந்தக் கிழமைகளும் எந்த விண்மீன் அப்படிச் சேரும்போது, அந்த ஆகாத...

குருமங்கல யோகம் என்றால் என்ன?

குருமங்கல யோகம் என்றால் என்ன? தமிழகத்தில் செவ்வாய் கோளிற்கு ஜாதகம் மற்றும் ஜோதிடத்தில் பெருமளவில் கவணம் கொடுப்பர். கவணம் பெற்ற செவ்வாயை கண்டால் தமிழக ஜோதிடர்கள் சற்று அய்யத்துடனேயே அதை கையாள்வர். சொல்லப்போனால், செவ்வாய் கிழமையை வெருவாய்...

சுனபா யோகம், அனபா யோகம்

சுனபா யோகம், அனபா யோகம் வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால், வியாழன் 2 ஆம் இடத்தில் இருந்தால் இது சுனபா யோகம். வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால்,...

குரு சந்திர யோகம்

குரு சந்திர யோகம் வியாழனும் நிலவும் சிறப்பான அமைப்பில் இருந்தால் அது தான் இந்த குரு சந்திர யோகம். இத்தகைய யோகம் நம் சாதகத்தில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது மிக எளிது. உங்கள் ஜாதகத்தில் நிலவு...

கஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது?

கஜகேசரி யோகம் கஜம் என்றால் யானை. கேசரி என்றால் அரிமா (சிங்கம்). கஜகேசரி யோகம் என்றால், யானை மற்றும் அரிமாவின் வலிமை பெற்ற ஒரு நிலை என பொருள். கஜகேசரி யோகம் கிடைத்தால் என்ன பயன்? ஒருவருக்கு குறிப்பிட்ட...