செவ்வாய் பலம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் சுறுசுறுப்பாகவும், வேகமாகவும் செயல்படுபவராக இருப்பார்.

செவ்வாய் ஒவ்வொரு ராசியிலும் 45 நாட்கள் அளவில் பயணிக்கும்.


இன்றைய இராசி கட்டம்


வெள்ளி(சுக்கிரன்) இராகு
இராசிஞாயிறு(சூரியன்) அறிவன்(புதன்)(வக்) செவ்வாய்
நிலவு
காரி(சனி)(வக்) கேது ல‌க்
வியாழன்(குரு)(வக்)

நிலவு (சந்திரன்) தற்பொழுது உத்திராடம் தாரகையில் (நட்சத்திரத்தில்) உள்ளார்.

இந்த தாரகை (நட்சத்திரம்) சூரியன் க்கு உரிமையானதாகும்

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய இராசிகளுக்கு சூலை 2019 மாத செவ்வாய் பெயர்ச்சி பலன்.

செவ்வாய் கோள் ஒரு இராசியில் சுமார் 45 நாட்கள் பயணிக்கும். ஒருமுறை ராசி சக்கரத்தைச் சுற்றிவர 18 திங்களாகின்றன.

செவ்வாய் தமிழர் இறைவனாம் முருகனை தனது இறைவனாக கொண்டது.

சாதக கணிப்பில் பயன்படும் ஒன்பது கோள்களில் செவ்வாய் மூன்றாவதாக குறிப்பிடப்படுகிறது.

செவ்வாய் தோசம் வந்தால் உடன் பிறந்தவர்களிடம் பகை ஏற்படும். கீழ் பணி செய்பவர்களால் அவமானப் படுதல், குடும்ப சொத்துக்களை விற்று, குடி, சூது, பெண் என்று அலைதல் போன்றவைகளுக்கும் ஆளாகக் கூடும். குடியிருக்க வசதியான வீடு அமையாது.

ஒரு மனிதனின் ஆற்றல் செவ்வாய் ஜாதகத்தில் அமைந்த விதத்தில்தான் அமையும்.

செவ்வாய் தோஷமுள்ள பெண் ஆண்மைக்குணம் அதிகம் உடையவள். செவ்வாய் தோஷம் உள்ள ஆண், பெண் தன்மை உடையவராவார்.

செவ்வாய் தோஷம் 7-ம் இடத்திலிருந்தும், 8-ம் இடத்திலிருந்தும் செயல்பட்டால் திருமணம் ஆனவுடன் செயல்பட ஆரம்பிக்கும். 12-ம் இடம், 2-ம் இடம் என்றால் பிறந்தது முதலே இருக்கும். 4-ம் இடம் செவ்வாய் வீடு வாய்க்கும் போதோ, கல்வி கற்கும் போதோ, பயணம் செய்யும் போதோ, பணியில் சேர்ந்த பின்பு மட்டும் செயல்படும்.

செவ்வாய் தோஷத்தை நீக்குவதற்கு செவ்வாய்க் கிழமைகளில் வள்ளலாரின் ‘தெய்வமணிமாலை’, குமர குருபர சுவாமிகள் எழுதிய திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, அருணகிரி நாதரின் திருப்புகழ், குறிப்பாக கந்தரலங்காரம், பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம், கவிதேவராயன் எழுதிய கந்தர்சஷ்டி கவசம் போன்றவைகளை படிக்க வேண்டும்.

செவ்வாயினால் இராசிக்காரருக்கு மனத் திடனும் அதனால் அரச சபையில் பேசும் ஆற்றலும், தோள் வலிமையும், போரில் வெற்றியும் கிடைக்கும்.

சாதகத்தில் செவ்வாய் நல்ல இடத்தில் அமைந்திருந்தால், கடன் தொல்லையின்றி, புவியையும், செல்வத்தையும், வண்டி வாங்குதல் மற்றும் புகழையும் அள்ளிக்கொடுப்பார்.

சாதகத்தில் ஒருவரை சிறந்த தலைவனாக்கக் கூடிய ஆற்றல் உடையவர் செவ்வாய். இவர் அருள் இருப்பவரை யாரும் எளிதில் வெல்ல முடியாது.

தமிழகத்தை தாண்டி வேறு எந்த மாநிலத்திலும் செவ்வாய் தோஷத்திற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

சோதிட குறிப்பு படி செவ்வாய் நெருப்பு கோளாகும்.

தீயுள்ள இடங்கள், தீயினால் இயக்கப்படும் எந்திரங்கள். மற்றுமுள்ள பொருட்கள், கொல்லன் பட்டறை, எந்திரக் கருவிகள், ஆயுதக் கிடங்குகள், சூளை, கொலை நடக்குமிடம், போர் திடல், போர்ப் பயிற்சிப் பள்ளிகள், பொறியியல் கூடங்கள், அறுவை மருத்துவம் செய்யும் இடங்கள் செவ்வாய் கோலின் பார்வை உள்ள இடங்களாகும்.

மனித உடலில் முகம், ரத்தம், சுரப்பிகள், விரை, கல்லீரல் இடது காது, எலும்புகளுக்குள்ளிருக்கும் சத்துப் பொருள் இவற்றில் ஆட்சி செலுத்துபவன் செவ்வாய்.

செவ்வாயால் காய்ச்சல், ரத்தக் கொதிப்பு, ரத்தப் போக்கு, விரைகளில் வலி, வீக்கம், சொறி சிரங்குகள், குஷ்டம், அடிபடுதல், பகைவர்களால் தாக்கப்பட்டுக் காயம் உண்டாகுதல், உடல் ஊனம் ஏற்படுதல், பில்லி, சூன்யம், போன்றவற்றால் பாதிப்புக்குள்ளாதல், தீ விபத்துக்குள்ளாதல் அறுவை மருத்துவம் செய்து கொள்ளுதல் போன்ற தொல்லைக்கு உள்ளாதல் ஏற்படும்.

பன்னிரண்டு ராசிகளில் முதல் வீடான மேஷமும் அதற்கு எட்டாமிடமான விருச்சிகமும் செவ்வாய் ஆட்சி பெறும் இராசிகளாகும்

இருபத்தேழு தாரகைகளில் மிருக சீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்றும் செவ்வாய்கு உரியன.

லக்னத்தில் செவ்வாய் இருந்தால் விரும்பிய வாழ்க்கை அமையாது. எடுக்கும் முயற்சிகளில் தோல்விகளைச் சந்திக்க நேரும்.

செவ்வாய்க்கு சூரியன், சந்திரன், குரு நட்பு, கோள்களாகும். சுக்கிரன், சனி சமம். புதன், ராகு, கேது பகையாகும்.

செவ்வாயின் ஆட்சி வீடுகள் மேஷமும் விருச்சிகமுமாகும். இவற்றில் மேஷத்தில் செவ்வாய் இருக்க நேர்ந்தால் உடல் பலம், மன உறுதி, துணிச்சல் மிக்கவராக இருப்பர். வீரதீர சாகசச் செயல் புரிவதில் வல்லவர். நினைத்தபடி முடிக்கும் ஆற்றல் பெற்றிருப்பர்.

காவல் துறை, ராணுவம் இவற்றில் ஒருவர் பணிபுரிய வேண்டுமெனில் செவ்வாய் பலம் பெற்று இருக்க வேண்டும்.

ஞாயிறிடமிருந்து சுமார் 15 கோடி மைல் தொலைவில் செவ்வாய் உள்ளது. இதன் குறுக்களவு 4200 மைல்கள். இது ஞாயிறை 687 நாட்களில் சுற்றி வருகிறது.

செவ்வாய் தோஷத்தால் பெற்றோருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதேபோல் மாமனார், மாமியாரையும் செவ்வாய் தோஷம் பாதிக்காது.

திருமண தாமதத்திற்கு , செவ்வாய் தோஷம் மட்டுமே காரணம் ஆகாது.

செவ்வாய் கிழமைக்கும், செவ்வாய் தோசத்திற்கும் சிறிது கூட சம்பந்தமில்லை.

செவ்வாய் தோஷக் காரர்கள் காலையில் தமிழர் கடவுள் முருகனை வழிபடுவது சிறந்தது.

தம்பதியருக்கு மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் நான்கு, எட்டு, பன்னிரண்டு தாரகைகளிலும் எந்த வித பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.

சரித்திரத்தில் அழியாப் புகழ் பெற்ற பல மாமன்னர்கள், சர்வாதிகாரிகள், மாவீரர்கள் ஆகியோர் செவ்வாயின் தீவிர ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தான்.

சூலை 2019 மாத செவ்வாய் பெயர்ச்சி பலன்

மேஷம் செவ்வாய் பெயர்ச்சி பலன்
மேஷம் செவ்வாய் பெயர்ச்சி பலன்

ரிஷபம் செவ்வாய் பெயர்ச்சி பலன்
ரிஷபம் செவ்வாய் பெயர்ச்சி பலன்

மிதுனம் செவ்வாய் பெயர்ச்சி பலன்
மிதுனம் செவ்வாய் பெயர்ச்சி பலன்

கடகம் செவ்வாய் பெயர்ச்சி பலன்
கடகம் செவ்வாய் பெயர்ச்சி பலன்

சிம்மம் செவ்வாய் பெயர்ச்சி பலன்
சிம்மம் செவ்வாய் பெயர்ச்சி பலன்

கன்னி செவ்வாய் பெயர்ச்சி பலன்
கன்னி செவ்வாய் பெயர்ச்சி பலன்

துலாம் செவ்வாய் பெயர்ச்சி பலன்
துலாம் செவ்வாய் பெயர்ச்சி பலன்

விருச்சிகம் செவ்வாய் பெயர்ச்சி பலன்
விருச்சிகம் செவ்வாய் பெயர்ச்சி பலன்

தனுசு செவ்வாய் பெயர்ச்சி பலன்
தனுசு செவ்வாய் பெயர்ச்சி பலன்

மகரம் செவ்வாய் பெயர்ச்சி பலன்
மகரம் செவ்வாய் பெயர்ச்சி பலன்

கும்பம் செவ்வாய் பெயர்ச்சி பலன்
கும்பம் செவ்வாய் பெயர்ச்சி பலன்

மீனம் செவ்வாய் பெயர்ச்சி பலன்
மீனம் செவ்வாய் பெயர்ச்சி பலன்

எம்மை தொடர

சமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.

ஃபேஸ்புக் விருப்பம்


டிவிட்டெர் விருப்பம்
Share on Twitter

யூடியூப் விருப்பம்


லிங்க்டு-இன் விருப்பம்
Share on LinkedIn

இன்றைய நாள் பலன்
தமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்


மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குருமங்கல யோகம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

சுனபா யோகம், அனபா யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குரு சந்திர யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

கஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

யோகம் என்றால் என்ன? யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

திதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன?
பதிவிட்ட நாள் Tuesday April 30, 2019

நல்ல நேரம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Monday April 29, 2019

துவி துவாதச தோஷம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Saturday April 13, 2019

லக்னம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Friday April 12, 2019