எண் கணிதமுறையில் சனி பெயர்ச்சி பலன்கடகம் இராசிக்கான காரி பெயர்ச்சி பலன்.

2017 - 2020 ஆண்டு கடகம் சனி பெயர்ச்சி பலன், கடகம் சனி பெயற்சி பலன், காரி என்ற கோளைத்தான் சனி என்று வட மொழியில் அழைக்கிறாரிகள். சனி ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் அளவில் பயணிக்கும்.

இன்றைய இராசி கட்டம்


வெள்ளி(சுக்கிரன்) இராகு
இராசிஞாயிறு(சூரியன்) அறிவன்(புதன்)(வக்) செவ்வாய்
நிலவு
காரி(சனி)(வக்) கேது ல‌க்
வியாழன்(குரு)(வக்)

2017 2020 கடகம் காரி என்கிற சனி பெயர்ச்சி பலன்.


Saturn - சனி transiting house: 6

எதிரிகளை வீழ்த்துவீர்கள்.

எடுத்த காரியங்களை சிரமமின்றி முடித்துவிடுவீர்கள். பெரியோர்களின் நட்பும் ஆசியும் உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். உடலிலிருந்த நோய் நொடி உபாதைகள் ஒவ்வொன்றாத மறையும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் குறையும். உங்களின் செயல்திறன் கூடும். தன்னம்பிக்கை உயரும். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனைவரும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். ஆன்மிகத்திலும் ஈடுபாடு அதிகரிக்கும். இல்லத்தில் அமைதி நிலவும். திருமணம் போன்ற சுப காரியங்களும் நடக்கக் காண்பீர்கள்.

குழந்தைகள் வழியில் சில சஞ்சலங்கள் தோன்றி மறையும். அவசர முடிவுகளால் சிறு பண விரயங்களும் உண்டாகும். சிலருக்கு இருக்கும் வீட்டைப் பராமரிக்கும் செலவுகளும் உண்டாகும். எவ்வளவு சிக்கலான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டாலும் பெரிய பாதிப்பு இல்லாமல் வெளியில் வந்து விடுவீர்கள். மேலும் எவருக்கும் இந்த காலகட்டத்தில் வாக்கு கொடுக்க வேண்டாம். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களின் தவறுகளையும் பெரிது படுத்த வேண்டாம். வெளியூர் வெளிநாட்டுத்தொடர்புகள் ஆக்கம் தரும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

பணப்புழக்கம் நிறைவாக இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். திடீர் பணப்புழக்கம் நிறைவாக இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தேடிவரும். உங்களின் முயற்சிகள் துரிதமாக வெற்றியடையும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். உற்றார் உறவினர்களுடன் சுமுகமாகப் பழகி வர, உங்கள் பழைய மனத்தாங்கல்கள் நீங்கிவிடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு புதிய இல்லங்களுக்கு மாறும் யோகம் உண்டாகும். சமூகத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். பெரிய செல்வந்தர்களின் நட்பு கிடைக்கும்.

அவர்களின் செல்வாக்கை உங்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்வீர்கள். செய்தொழில் மூலமாக சென்று வந்த பயணங்களால் லாபம் அதிகரிக்கும். பங்குவர்த்தகம் மூலமும் உபரி வருமானம் கிடைக்கும் காலகட்டமாக இகு அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் பிரச்னைகள் குறையும். உங்கள் மனதில் இருந்த குழப்பங்கள் மறைந்து தெளிவு பிறக்கும். பொருளாதாரம் முன்னேற்றமாக இருக்கும். உங்கள் வேலைகளை திட்டமிட்டதுபோல் சரியாக செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளும் மனக்கசப்பு நீங்கி பரிவுடன் நடந்து கொள்வார்கள். மனதில் இருந்த சலிப்புகள் நீங்கி சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். வியாபாரிகள் கடுமையாக உழைத்து அதற்கேற்ற பலன்களைப் பெறுவார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக முடியும். உங்களின் தன்னம்பிக்கை உயரும். தெளிந்த மனதுடன் உங்கள் செயல்களைச் செய்வீர்கள்.

கூட்டாளிகளின் சூழ்ச்சிக்கு ஆளாக நேரிடலாம்.

விவசாயிகளுக்கு விளைச்சல் சற்று மந்தமாக இருந்தாலும் வருமானத்திற்குக் குறைவு இருக்காது. பழைய குத்தகை மூலம் வருமானம் கிடைக்கும். புதிய குத்தகைகளும் தானாகவே தேடாமலேயே கிடைக்கும். கால்நடைகள் மூலமும் எதிர்பார்த்த நன்மைகள் பெறலாம். வருங்காலக் கனவுகள் பலிப்பதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் முக்கிய பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள். அனைத்துச் செயல்களையும் ஒருமுறைக்கு இருமுறை தீர ஆலோசித்து செயல்படுத்துவீர்கள். கட்சியில் மூத்தவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்கள். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது கவனமாக இருக்கவும். எவருக்கும் அனைவசியமாக வாக்கு கொடுக்க வேண்டாம்.

கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வருமானமும் பெருகும். சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைத்து அவர்கள் மூலம் புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.

பெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டு தங்களின் காரியங்களைச் சாதித்துக்கொள்வார்கள். குடும்பத்தில் ஏற்படும் சிறிய சண்டை சச்சரவுகளை பெரிதுபடுத்த மாட்டீர்கள். குழந்தைகளின் சிறு தவறுகளையும் கண்டு கொள்ளமாட்டீர்கள். அவர்களை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். குடும்பத்தினருடன் ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள்.

மாணவமணிகள் அவசரப்படாமல் நிதானமாகப் பணியாறறுவார்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கைகொடுக்கும்.

Saturn - சனி aspects house 12.


2017 - 2020 சனி பெயர்சி பலன்

மேஷம் சனி பெயர்சி பலன்
மேஷம் சனி பெயர்ச்சி பலன்

ரிஷபம் சனி பெயர்ச்சி பலன்
ரிஷபம் சனி பெயர்ச்சி பலன்

மிதுனம் சனி பெயர்ச்சி பலன்
மிதுனம் சனி பெயர்ச்சி பலன்

கடகம் சனி பெயர்ச்சி பலன்
கடகம் சனி பெயர்ச்சி பலன்

சிம்மம் சனி பெயர்ச்சி பலன்
சிம்மம் சனி பெயர்ச்சி பலன்

கன்னி சனி பெயர்ச்சி பலன்
கன்னி சனி பெயர்ச்சி பலன்

துலாம் சனி பெயர்ச்சி பலன்
துலாம் சனி பெயர்ச்சி பலன்

விருச்சிகம் சனி பெயர்ச்சி பலன்
விருச்சிகம் சனி பெயர்ச்சி பலன்

தனுசு சனி பெயர்ச்சி பலன்
தனுசு சனி பெயர்ச்சி பலன்

மகரம் சனி பெயர்ச்சி பலன்
மகரம் சனி பெயர்ச்சி பலன்

கும்பம் சனி பெயர்ச்சி பலன்
கும்பம் சனி பெயர்ச்சி பலன்

மீனம் சனி பெயர்ச்சி பலன்
மீனம் சனி பெயர்ச்சி பலன்

எம்மை தொடர

சமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.

ஃபேஸ்புக் விருப்பம்


டிவிட்டெர் விருப்பம்
Share on Twitter

யூடியூப் விருப்பம்


லிங்க்டு-இன் விருப்பம்
Share on LinkedIn

இன்றைய நாள் பலன்




தமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்


மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குருமங்கல யோகம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

சுனபா யோகம், அனபா யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குரு சந்திர யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

கஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

யோகம் என்றால் என்ன? யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

திதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன?
பதிவிட்ட நாள் Tuesday April 30, 2019

நல்ல நேரம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Monday April 29, 2019

துவி துவாதச தோஷம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Saturday April 13, 2019

லக்னம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Friday April 12, 2019